நதிகளில் பாயும் தண்ணீரால்
நாடு செழிக்கும் ; நம் மக்கள் வாழ்வார்.
நாளத்தில் செல்லும் செந்நீரால் உடல்
நலம் பெருக்கி வாழ்வார் நம் மக்கள்.
மாசனைத்தும் சிறு நீரக நுண்
வலையால் தனிப்பட்டு வெளியேறும்.
தூயதான குருதி ஓடி எல்லா
துணை உறுப்புக்கும் உணவூட்டும்.
நதிநீர் ஓடும் வாய்கால் கரையில்
நம் உழவர் வயலைப் பயிரிட்டு
உணவைப் பெருக்கி ஊட்டிடுவர்
உறுபசி பஞ்சம் போக்கிடுவர்.
தண்ணீரை நாம் தடுப்பதனால்
தரணியெங்கும் வறட்சியாகும்
செந்நீரை நிணம் தடுப்பதனால்
தேகமெங்கும் நோயாகும்.
இரத்த தானம் செய்திடுவோம் எளியோர்
இன்னுயிர்களைக் காத்திடுவோம்;
தண்ணீரை தேவையில் விடுவித்து
சமாதான சகவாழ்வை போற்றிடுவோம்.
இந்தியா ஓர் நாடாகும் ; நாமெல்லாம்
இந்தியத்தாய் பெற்ற மக்களவோம்
என்றுறுதி கொண்டே வாழ்ந்திடுவோம்
அன்றி முற்றும் முழுதாய் வீழ்ந்திடுவோம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

